ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராவோம்: உறுதியளித்த மனோ கணேசன்
ஜனாதிபதி தேர்தலை தவிர வேறு எந்த தேர்தலையும், ரணில் நடத்த விட மாட்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (26.07.2023) ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டு பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் தேர்தல் நடத்தும்படி கோரினர்.
"13ஐ முழுமையாக வைத்து தேர்தல் நடத்தினால், தெற்கின் ஏழு மாகாணங்களிலும், வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரத்தை ரணில் வழங்கி விட்டார் என்பதையே அடிப்படையாக கொண்டு தென்னிலங்கையில் இனவாத பிரசாரம் நடக்கும்.ஆகவே தேர்தலை நடத்த முடியாது" என ஜனாதிபதி ரணில் திட்டவட்டமாக கூறி விட்டார்.
வேறு எந்த தேர்தலையும் ஜனாதிபதி நடத்த விடமாட்டார்
ஆகவே, எக்காரணம் கொண்டும், ஜனாதிபதி தேர்தலை தவிர வேறு எந்த தேர்தலையும், ரணில் நடத்த விட மாட்டார் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. இதுதான் அரசியல் யதார்த்தம்.
ஆகவே தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக நான், இன்று கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ரவுப் ஹக்கீமும் கருத்து தெரிவிக்கவில்லை.
ஆகவே நாம் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராவோம்.
புதிய ஜனாதிபதி, அதையடுத்து புதிய நாடாளுமன்றம், என்ற நிலைமாறல்களுக்கு பிறகுதான் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் எந்த மாற்றமும் ஏற்பட முடியும் என தெரிவித்துள்ளார்.
மேலும் 13ம் திருத்தத்தை முழுமையாக பொலிஸ் அதிகாரத்துடன் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாகல காரியவாசம், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, கெவிது குமாரதுங்க, சரத் வீரசேகர ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam
