யாழில் முதன்முறையாக முத்தமிழ் விழா ஏற்பாடுகள் முன்னெடுப்பு: மாநகர முதல்வர் (Video)
யாழ்.மாநகர சபையின் ஏற்பாட்டில் முதன்முறையாக முத்தமிழ் விழா எதிர்வரும் 16ஆம் திகதி காலை 8.30 மணி முதல் நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
முத்தமிழ் விழா தொடர்பாகத் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு யாழ் மாநகர சபையில் இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
காலை முதல் இரவு வரை இயற்துறை, இசைத்துறை, நாடகத்துறை என மூன்று அமர்வுகளாக நிகழ்ச்சிகளை நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது கம்பவாரிதி இ.ஜெயராஜ் குழுவினரின் வழக்காடு மன்றம், பாலமுருகன்
மற்றும் குமரனின் நாத சங்கமம்,சத்தியவான் சாவித்ரி நாடகம், வீரபாண்டிய
கட்டப்பொம்மன் நாடகம் உட்படப் பல நிகழ்வுகள் அரங்கேறவுள்ளன என கூறியுள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 21 மணி நேரம் முன்
H-1B விசா வைத்துள்ளோருக்கு விரைவு பாதையை திறந்த கனடா.,1.7 பில்லியன் டொலர் திட்டம் அறிவிப்பு News Lankasri
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam