சுனில் ஹந்துன்நெத்தி மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்..! முன்னாள் எம்.பி வலியுறுத்து
நாட்டில் கொண்டு வரப்பட்ட அனைத்து கல்வி சீர்திருத்தங்களுக்கும் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வந்த ஜே.வி.பியினர் குறிப்பாக சுனில் ஹந்துன்நெத்தி மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்துள்ளார்.
மேலும் அது தொடர்பில் உரையாற்றி அவர்,
“தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து பத்து மாதங்கள் கடந்து விட்ட நிலையில், கல்வி சீர்திருத்தம் கொண்டு வருவதென்பது எவ்வாறு நடைமுறை சாத்தியமாகும்.
பொது மக்களிடம் மன்னிப்பு
கடந்த ஆட்சியின் எதிர்கால திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த கல்வி சீர்திருத்ததை வைத்து கொண்டு அவர்களின் பாடல் போல் பாடி வருகின்றனர்.
கல்வி சீர்திருத்தம் இன்றுவரை நிறுத்திவைக்கப்படதற்கு சுனில் ஹந்துன்நெத்தி போன்றோர் மூலகாரணமாக செயற்பட்டவர்கள்.
இதை தொடர்ந்து கொண்டு செல்வதற்கு பொது மக்களிடம் அவர்கள் மன்னிப்பு கோர வேண்டும்.
ஜனாதிபதி குறிப்பிடும் கன்னியமான மாணவர் பரம்பரை ஒன்றை உருவாக்க வேண்டுமானால் வரலாறும், பௌதிகவியலும் அவசியமானதாகும். அந்த பாடங்கள் இல்லாமல் எப்படி கன்னியமான பரம்பரையை உருவாக்குவது?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



