திருமணத்திற்கு தயாரான தாய்.. பரிதாபமாக பலியான குழந்தை!
திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெவோன் நீர் வீழ்ச்சிக்கு நீர் ஏந்தி செல்லும் கொட்டகலை ரொசிட்ட பகுதியில் உள்ள ஆறு ஒன்றில் இருந்து நான்கு வயது குழந்தை சடலமாக மீடகப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் (26.07.2025) இன்று இடம்பெற்றதாக பொலிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
திருமண நிகழ்வு ஒன்றுக்கு செல்வதற்காக தனது மகளை தயார்படுத்தி வைத்து விட்டு குழந்தையின் தாய் தயாராகி கொண்டிருந்த நிலையில் குறித்த நான்கு வயது குழந்தை வீட்டின் அருகில் உள்ள ஆற்றில் தவறுதலாக விழுந்து நீரில் அடித்து சென்றுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
தேடும் பணி
குறித்த குழந்தையை, பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்ட போது குழந்தை சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பின்னர், கொட்டகலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், குழந்தை உயிரிழந்துள்ளமை தெரிய வந்துள்ளது.
குழந்தையின் சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை திம்புள்ள - பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







