அணைக்கட்டு உடைப்பு! உலங்கு வானூர்தியில் கொண்டுசெல்லப்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள்
மாவிலாறு பகுதியின் அணைக்கட்டு உடைப்பு காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் வான் வழியாக திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு பாதுகாப்பாக படையினரின் உதவியுடன் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
மூதூர் மற்றும் சேருவில பகுதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொதிகள் மற்றும் சுகாதார வசதிகளை இன்று (01) ஹெலிகொப்டர் மூலம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

உலங்கு வானூர்தியில் கொண்டுசெல்லப்பட்ட கர்ப்பிணிகள்
மேலும் சேருவில பகுதியில் உள்ள கர்ப்பிணி தாய்மார்கள் வான் வழியாக திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு பாதுகாப்பாக படையினரின் உதவியுடன் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமனவும் களத்தில் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
