வவுனியாவில் கிணற்றுக்குள் குதித்து கர்ப்பிணி பெண் தற்கொலை!
வவுனியாவில் கிணற்றுக்குள் குதித்து தற்கொலைக்கு முயற்சித்த கர்ப்பிணி பெண் மரணமடைந்துள்ளதுடன், பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய கர்ப்பிணி பெண் ஒருவர் கிணற்றுக்குள் குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
இதனையடுத்து கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் குறித்த பெண்ணை கிணற்றில் இருந்து மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த கர்ப்பிணிப் பெண் மரணமடைந்தார்.
மரணமடைந்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவருடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam
