ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்ல முற்றுகை! நடந்தது என்ன?
மீரிஹனையில் அமைந்துள்ள ஜனாதிபதியின் தனிப்பட்ட வீடு முற்றுகையின் போது எவரும் கைது செய்யப்பட்டதாக இதுவரை தகவல்கள் இல்லை.
காயங்களுக்கு உள்ளான 10 பேர் மருத்துவமனைகளி;ல் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் 6 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், 4 பேர் கொழும்பு தெற்கு போதனா மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
முற்றுகைப் போராட்டத்தில் பெண்களும் பங்கேற்ற நிலையில் காயமடைந்த அனைவரும் ஆண்கள் என்றும் இதில் சிலர் முற்றுகை தொடர்பில் செய்தி சேகரித்துக்கொண்டிருந்த ஊடகவியலாளர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்வத்தின்போது இராணுவத்துக்கு சொந்தமான பேரூந்து ஒன்றும் ஜீப் ஒன்றும் எரியூட்டப்பட்;டுள்ளது.
இதேவேளை கண்டி- கொழும்பு வீதியின் புலுகஹா சந்தியிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது
இதன் காரணமாக வாகன போக்குவரத்துக்களுக்கு பாதிப்பு ஏற்ப்ட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது








அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
