இலங்கையின் தனியார் பேருந்துகளில் புரட்சி“ புதிய கட்டணமுறை அறிமுகம்!
இலங்கையின் தனியார் பேரூந்துகளில் கட்டணங்களை செலுத்துவதற்காக “முன்கூட்டிய பணம் செலுத்திய அட்டைகள்”(Pre paid cards) அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் அங்கீகாரம் போக்குவரத்து அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜேயரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்படி, 2022 ஜனவரி மாதம் நடுப்பகுதியில் இருந்து “முன்கூட்டிய பணம் செலுத்திய அட்டைகள்”(Pre paid cards) அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது
எனினும் போக்குவரத்து துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, உடல் நலக்குறைவால் விடுமுறையில் இருப்பதன் காரணமாக இந்த நடைமுறையில் தாமதம் ஏற்படலாம் என்று அவர் எமது செய்திச்சேவைக்கு தெரிவித்தார்.
இந்தநிலையில் முன்கூட்டியே கட்டணம் செலுத்தும் அட்டைகளை அறிமுகப்படுத்தப்படுவதால், பேருந்துகளின் நடத்துனர்கள் தமது தொழில்களை இழக்கமாட்டார்கள் என்றும் கெனும விஜேயரட்ன தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம், அறிமுகப்படுத்தப்பட்டால், தற்போதைய பொருளாதார சிக்கல் நிலையில் பயணிகளுக்கு அது நன்மையை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
