பிரசன்ன ரணவீரவுக்கு மீண்டும் விளக்கமறியல்
கிரிபத்கொடையில் அரசுக்குச் சொந்தமான காணியை போலி ஆவணங்களை தயாரித்து தனியாருக்கு விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மஹர நீதவான் ஜனிதா பெரேரா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பிரசன்ன ரணவீரவை செப்டம்பர் 22 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போலி ஆவணங்களைத் தயாரித்து
வழக்கு ஸ்கைப் மூலம் விசாரிக்கப்பட்டதால், முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர இன்று நீதிமன்றத்தில் நேரில் முற்படுத்தப்படவில்லை.
கிரிபத்கொடையில் அரசுக்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்களைத் தயாரித்து தனியாருக்கு விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் ரணவீரவும் மேலும் நால்வரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
