மக்களை ஆட்சியின் அங்கமாக்குவதே 'பிரஜா சக்தி! பிரதமர் ஹரிணி தெரிவிப்பு

Government Of Sri Lanka Sri Lankan Peoples Harini Amarasuriya Election
By Rakesh Jun 03, 2026 08:00 AM GMT
Report

'பிரஜா சக்தி' வேலைத்திட்டமானது தற்போதைய மக்கள்நேய அரசாங்கத்தின் ஜனநாயகப் பண்புகளை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய கட்டம் என்றும், அந்தந்தப் பிரதேசங்களுக்குரிய தனித்துவமான பொருளாதார முறைகளை இனம் கண்டு கிராமங்களை அபிவிருத்தி செய்வதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கிராமிய அபிவிருத்தி மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் மக்களைப் பங்காளிகளாக்குவதற்காக, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் 'பிரஜா சக்தி' வறுமை ஒழிப்பு தேசிய இயக்கத்தின் 'ஆயிரம் கிராமங்களில், ஆயிரம் பணிகள்' திட்டத்தின் கொழும்பு மாவட்ட ஆரம்ப நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கஸ்பாவ, நாம்பமுணுவ கிராம உத்தியோகத்தர் பிரிவில் தரிசுநிலங்களாகக் கிடந்த வயல்களை மீண்டும் பயிர்செய்யும் 'பிரஜா சக்தி' அபிவிருத்தி சபையின் வேலைத்திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே பிரதமர் இக்கருத்தைக் கூறினார். அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதமர்,

காப்புறுதிக்கூட்டுத்தாபனத்தில் வாடிக்கையாளர்களின் வைப்புப்பண முதலீடு..! ஏற்பட்ட பெருந்தொகை நட்டம்

காப்புறுதிக்கூட்டுத்தாபனத்தில் வாடிக்கையாளர்களின் வைப்புப்பண முதலீடு..! ஏற்பட்ட பெருந்தொகை நட்டம்

அரசாங்கத்தின் மக்கள் நேய ஆட்சி

"அரசாங்கத்தின் மக்கள்நேய ஆட்சியின் ஜனநாயகப் பண்புகளை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய சந்தர்ப்பமாக இந்த 'பிரஜா சக்தி' வேலைத்திட்டத்தை அடையாளப்படுத்தலாம்.

மக்களை ஆட்சியின் அங்கமாக்குவதே

மக்கள்நேய ஆட்சி என்பது அரசாங்கம் மாத்திரம் தனித்துச் செயற்படுவதல்ல; மாறாக அது அரசாங்கம், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகிய அனைத்துத் தரப்புகளும் இணைந்து மேற்கொள்ளும் ஒரு கூட்டு முயற்சியாகும் என்பதையே இத்திட்டத்தின் பெயர் உணர்த்துகின்றது.

தேர்தல் காலங்களில் மாத்திரம் ஆட்சியாளர்கள் மக்களுடன் இணைந்து இயங்குவதல்ல, மாறாக மக்களை ஆட்சியின் ஓர் அங்கமாக மாற்றிச் செயற்பாட்டுரீதியாகவே அவர்களின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளும் எண்ணக்கருவை, இந்த 'பிரஜா சக்தி' வேலைத்திட்டத்தின் ஊடாகச் சகல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் ஸ்தாபித்திருக்கின்றோம்.

பெயரளவிலான வலுவூட்டல் திட்டங்கள் இதற்கு முன்பும் நாட்டில் இருந்தன. ஆனால், அவற்றின் மூலம் மக்களுக்கு உரிய பலன்கள் கிடைக்கவில்லை; அரசியல்வாதிகள் மட்டுமே அதன் மூலம் வலுவடைந்தனர்.

பிறரைச் சார்ந்திருக்கும் மனநிலையிலிருந்து விடுபட்ட எமது நாட்டு மக்கள், கடந்த 2024ஆம் ஆண்டில் மேற்கொண்ட அரசியல் மாற்றத்தை அடுத்து, நாட்டைத் தங்களது சொந்த உழைப்பால் கட்டியெழுப்பும் பொறுப்பைத் தம் கைகளில் எடுத்து இந்த வேலைத்திட்டத்துடன் இணைகின்றார்கள்.

பொருளாதார வலுவூட்டல் முறை

பொருளாதார வலுவூட்டலை இலக்காகக் கொண்டு, தமது பிரதேசத்திற்குரிய தனித்துவமான பொருளாதார முறையைக் கண்டறிந்து அதனைக் கட்டியெழுப்புவதை இந்தத் திட்டங்கள் மூலம் வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும்.

மக்களை ஆட்சியின் அங்கமாக்குவதே

உலக அரசியல் பின்னணியில் ஏற்பட்டிருக்கும் தற்போதைய நெருக்கடி நிலைமைகளில், பொருளாதாரப் பாதுகாப்பிற்காகத் தன்னிறைவு பெற்ற வாழ்க்கை முறையானது எந்தவொரு நாட்டு மக்களுக்கும் மிக முக்கியமானதாக அமைகின்றது.

நாம் உள்நாட்டில் இறக்குமதி செய்ய வேண்டிய இன்றியமையாத பொருட்களை மாத்திரம் இறக்குமதி செய்வதோடு, உற்பத்தி செய்யக்கூடிய அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் எமது நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும். அதன் மூலம், உலகளாவிய சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய பலமான பொருளாதாரத்தை, உணவுப் பாதுகாப்பின் ஊடாக நாம் கட்டியெழுப்ப வேண்டும்.

பொதுமக்கள் திட்டங்கள்

அரசாங்கம், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பைப் பேணுவதன் மூலம், இந்தத் திட்டங்களின் ஊடாக மக்களின் வறுமை முழுமையாக ஒழிக்கப்படும்.

அப்போது ஒரு வளமான நாடு உருவாவதோடு, ஒட்டுமொத்த மக்களுக்கும் இயல்பாகவே அழகானதொரு வாழ்க்கையும் உருவாகும்." - என்றார்.

இந்நிகழ்வில் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் நிபுணாராச்சி, கஸ்பாவ நகர சபைத் தலைவர் சாமர மத்தும கலுகே, பொரலஸ்கமுவ நகர சபைத் தலைவர் பிரதீப் நிஷாந்த வெதமுல்ல, நகர சபை உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கையில் அதிகரிக்கப்படவுள்ள மற்றுமொரு கட்டணம்! வெளியான அறிவிப்பு

இலங்கையில் அதிகரிக்கப்படவுள்ள மற்றுமொரு கட்டணம்! வெளியான அறிவிப்பு

மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom, இணுவில் கிழக்கு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US