ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சரியான முறையில் செயற்படுத்தப்படுகின்றன! பிரதேசசபை தவிசாளர்
இந்த நாட்டின் கொள்கைகள் சரியான சட்ட திட்டங்களுக்கு அமைய ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சரியான முறையில் செயற்படுத்தப்படுகின்றன என மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்றைய தினம் (12.08.2026) இடம்பெற்ற நிகழ்வில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், 2026ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 600 மில்லியன் ரூபா வரவு செலவுத் திட்டத்தை எனது பிரதேசசபையில் நாங்கள் கொண்டு வந்திருந்தோம். அதில் சுமார் நூறு மில்லியன் ரூபா நிதியை நாம் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கீடு செய்திருக்கின்றோம்.
ஆயுர்வேத மருத்துவ சேவை
பெரியகல்லாரிலும், இதே போன்று ஓர் ஆயுர்வேத வைத்தியசாலை அமைந்துள்ளது. இப்பிரதேசத்தில் இருக்கின்ற இந்த ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு எமது பிரதேச சபையால் வருடத்திற்கு சுமார் பத்து மில்லியன் ரூபாய்க்கு பெறுமதியான மருந்துகளை நாங்கள் வழங்குகின்றோம்.
இந்த சேவையை நாம் நேரடியாகவே கிழக்கு மாகாண ஆளுநர் ஊடாக இந்த ஓந்தாச்சிமடம் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு நாம் ஒப்படைக்கின்றோம். ஏனெனில் சிறந்த ஒரு ஆயுர்வேத மருத்துவ சேவையினை ஓந்தாச்சிமடம் வைத்தியசாலை வழங்குவதற்குரிய வாய்ப்புகள் இருக்கின்றது.

இலங்கையில் முதன் முதலாக இலத்திரனியல் ஆயுள்வேத வைத்தியசாலையாக இந்த ஆயுள்வேத வைத்தியசாலை செயற்படுகின்றது. சாதாரணமாக 10 மில்லியன் ரூபாய் நிதி ஒரு பிரதேச சபையினால் வழங்கப்படுகின்ற பணம் சிதைந்து போகின்றது. அதனை சரியான முறையில் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டும். அதனை நாம் இந்த கிழக்கு மாநகர ஆளுநர் ஊடாக வழங்குவதற்குள்ளோம்.
நிதி ஒதுக்கீடு
இந்த நாட்டின் ஜனாதிபதி அவர்கள் மட்டக்களப்புக்கு விஜயம் செய்த போது அவர் கூறியவிடயம் சுகாதாரத்துறை அபிவிருத்தி மற்றும் வெளிநாட்டவர்களின் வருகை தொடர்பிலும் தெரிவித்திருந்தார். அது நல்ல விடயம் அதற்காக வேண்டி ஓந்தாச்சிமடம் கடற்கரையை அழகுபடுத்தி நவீனமயப்படுத்தி தருவதற்கு கிழக்கு மாகாண சபை எனக்கு 12 மில்லியன் ரூபாய்க்களை ஒதுக்கீடு செய்திருக்கின்றது.
அதற்காக நான் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். கிழக்கு மாகாணத்திலேயே முதலாவது கடற்கரை பிரதேசமாக இந்த ஓந்தாச்சிமடம் கடற்கரையை மாற்றி அமைக்க வேண்டும் என நான் நினைக்கின்றேன். அதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் வேண்டி இருக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.