ஞாயிற்றுக்கிழமை இயங்கிய தனியார் கல்வி நிலையத்திற்குச் சென்ற பிரதேசசபைத் தவிசாளர்
மண்முனை - தென்எருவில் பற்று பிரதேசசபையினால் ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களின் நலன் கருதியும், அதிகரித்து வரும் தொடர் கற்பித்தல் நடவடிக்கைகளினால் மாணவர்களின் உள நலத்தை பாதுகாக்கும் நோக்கிலும் தனியார் கல்வி நிறுவனங்கள் பூட்டப்பட வேண்டும் என கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அறிவிப்பு விடுவிக்கப்பட்டிருந்தன.
இதனையடுத்து கடந்த வாரம் மண்முனை தென்எருவில் பற்று பிரதேசசபை எல்லைக்குட்பட்ட சகல தனியார் கல்வி நிலையங்களும் ஞாயிற்றுக்கிழமைகளில் பூட்டப்பட்டன.
பார்வையிட்ட தவிசாளர்
இதனிடையே மண்முனை தென் எருவில் பற்று தவிசாளருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய ஞாயிற்றுக்கிழமை (05.10.2025) அன்று மகிழூரில் கிராமத்தில் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தனியார் கல்வி நிலையம் ஒன்றிற்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டிருந்தார்.
இதன்போது தவிசாளர் வினோராஜ் கூறுகையில், அதிகரித்து வரும் தொடர் கற்பித்தல் நடவடிக்கைகளினால் மாணவர்களின் உள நலத்தை பாதுகாக்கும் நோக்கில்தான் நாங்கள் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் தனியார் கல்வி நிலையங்களை மூடுமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்க வேண்டும்.
மாணவர்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும்
நாங்கள் கற்பித்தலுக்கு எதிரானவர்கள் அல்ல. இருப்பினும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரமாவது மாணவர்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்கள் அறநெறிப் பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டும், உறவினர்களின் வீடுகளுக்குச் செல்ல வேண்டும், வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் பிள்ளைகளை சுதந்திரமாக விடவேண்டும் என்பதற்காகவே நாம் இவ்வாறு தீர்மானித்துள்ளோம் என கூறியுள்ளார்.









தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

நொருங்கிய கார்.. நிச்சயதார்த்தம் முடிந்த மூன்றே நாளில் விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா Cineulagam

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
