தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு.. பிரபு எம்பி தெரிவிப்பு
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உள்நாட்டுப் பொறிமுறை ஊடாக தீர்வு வெகு விரைவில் எட்டப்படும் என தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
மட்டக்களப்பு பகுதிகளில் இடம்பெற இருக்கும் வீதி அபிவிருத்தி தொடர்பாக நேற்று (19) நேரில் சென்று வீதிகளை பார்வையிடும் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர், "தேசிய மக்கள் சக்தி இந்த நாட்டை பொறுப்பேற்றதன் பின்னர் மிகவும் நேர்த்தியாகவும் நீதியான முறையில் சட்ட ஆட்சியை நடைமுறைப்படுத்தும் ஒரு அரசாங்கமாக தொடர்ச்சியாக இருந்து வருகிறது.
அபிவிருத்தி திட்டங்கள்
அபிவிருத்தி திட்டங்களுக்கான வரவு - செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டங்களை கொண்டு நாங்கள் வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
அதற்கான முன் மீளாய்வு செயற்பாடுகளை செய்து இருக்கிறோம். தற்போது எதிர்க் கட்சியை சேர்ந்தவர்கள் எங்களுக்கு எதிராக தொடர்ச்சியாக சேறு பூசும் நடவடிக்கை முன் எடுத்து வருகின்றனர்.
குறிப்பாக வடக்கு கிழக்கை பிரதி நிதிப்படுத்துகின்ற தமிழ் அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக ஒரு சில விடையங்களை மாத்திரம் கூறிக் கொண்டு தங்களது வங்குரோத்து அரசியலை மேற்கொண்டு வருகின்றனர்” என குறிப்பிட்டார்.



