தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை அதிகரிப்பு
தாய்வானின் கிழக்கு கடற்கரையில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 09 ஆக உயர்ந்துள்ளதுடன், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 800 ஐ தாண்டியுள்ளது.
தாய்வானின் கிழக்கு கடற்கரையில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியிருந்தது.
இந்நிலையில், நிலநடுக்க இடிபாடுகளில் 127 பேர் சிக்கியிருக்கலாம் எனவும், நிலநடுக்கத்தால் சுரங்கப்பாதைகள் இடிந்து விழுந்து பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுனாமி எச்சரிக்கை
சுரங்கப்பாதையில் சிக்கிய 77 பேரின் உயிரை நிவாரணக் குழுவினர் காப்பாற்றியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், தாய்வான், ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தாய்வானில் கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுவெனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... மெகா சங்கமம், எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan