கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் - இன்று மின்தடை ஏற்படுமா..!
இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களும் இன்றைய தினம் கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் தலைவர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மின்சார சபையை விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அனைத்து ஊழியர்களும் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பிற்பகல் ஒரு மணிக்கு விஹார மகாதேவி பூங்காவில் விசேட மாநாடு ஒன்று இடம்பெறவுள்ளது.
இணக்கப்பாடு எட்ட நடவடிக்கை

எதிர்காலத்தில் இதற்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் மேற்கொள்ளப்படவுள்ள இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இன்றைய தினம் (21.06.2023) மின் தடை ஏற்படக்கூடும் என ரஞ்சன் ஜயலால் எச்சரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
பிக்குகளின் போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை: ஏற்பட்டாளர் தித்தகல்லே பிக்குவின் ஊடகவியலாளர் மாநாட்டில்...
சூடுபிடித்துள்ள ஞானசார தேரர் விவகாரம்: விகார மகாதேவி பூங்காவில் முகாமிட்டுள்ள தேரர்கள்! குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்
“இந்த நாட்டில் இரத்தம் சிந்தியது போதும்” மதச் சாயலுக்குள் மீண்டும் பாழாய்ப்போன அரசியல்-புதிய சிறகுகள் அமைப்பு சுட்டிக்காட்டு
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri