எதிர்வரும் 10ஆம் திகதி வரை ஒரு மணிநேர மின்வெட்டு! வெளியானது அறிவிப்பு
எதிர்வரும் 10ஆம் திகதி வரை இலங்கையில் ஒரு மணிநேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, U, V, W ஆகிய பிரிவுகளுக்கு மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் கட்டணம்
இதேவேளை மின் கட்டண அலகுகளின் அதிகரிப்பு விபரம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதிகரிக்கும் மின்சாரக் கட்டணம் காரணமாக குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிவாரணம் வழங்கப்படுமா என திறைசேரியிடம் வினவிய போதிலும் இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நீர் மின் உற்பத்தியை 60 வீதமாக அதிகரிக்க முடிந்தால் தினசரி மின்வெட்டை நிறுத்த முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri