எந்நேரத்திலிலும் பயன்படுத்தும்படி கோட்டாபயவிற்கு கிடைக்கவுள்ள அதிகாரம்! தயார்நிலையில் இருக்கவும் அறிவுறுத்தல் (Video)
மகிந்த ராஜபக்ச பதவி விலகியதால் ஏற்பட்ட தவறை திருத்திக் கொள்ளக்கூடிய வாய்ப்பு விரைவில் கிடைக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினரிடம் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
எப்படியும் எதிர்வரும் மார்ச் மாதத்தின் பின்னர் தேர்தல் நடத்தப்படலாம் என்றும், எந்தவொரு தேர்தலுக்கும் தயாராக இருக்குமாறும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
அத்துடன் எதிர்வரும் மார்ச் மாதத்தின் பின்னர் அரசியலமைப்பு ரீதியில் எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் தனக்கு கிடைக்கும் என்றும், ஏற்பட்ட தவறுகளை திருத்திக் கொள்ள அதன்போது சந்தர்ப்பம் கிடைக்கும் என்பதுடன், பொதுஜன பெரமுனவினரின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan