மொட்டு கட்சியின் அதிகாரம் ரணிலிடமே..! உதய கம்மன்பில - செய்திகளின் தொகுப்பு
மொட்டு கட்சியின் அதிகாரத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கைப்பற்றியுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.
மொட்டு கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவின் கருத்துக்களை ரணில் கண்டு கொள்வதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்திக்கொள்ள மொட்டு கட்சி விரும்பிய போதிலும், அதனை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை என்பதோடு முதலில் ஜனாதிபதி தேர்தலே நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தில் ரணில் விக்ரமசிங்க இருக்கின்றார்.
ஜனாதிபதி தேர்தலில் அடையும் தோல்வி மொட்டு கட்சியின் நாடாளுமன்ற தேர்தலை பாதிக்கும் என்பதனால் இவ்வாறு முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டாம் என மொட்டு கட்சி கோருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |