நாளைய தினமும் மின்வெட்டு! வெளியானது அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் நாளை சுழற்சி முறையில் 7 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாளை காலை 8 மணித்தொடக்கம் மாலை 6 மணி வரையிலான காலப்பகுதிக்குள் 5 மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
அத்துடன், மாலை 6 மணித்தொடக்கம் இரவு 11 மணி வரையிலான காலப்பகுதிக்குள் 2 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் தற்போதுள்ள தவறான நிதியியல் கொள்கையை மேலும் நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் நிலைமை இன்னும் மோசமாகி, எதிர்வரும் நாட்களில் ஒரு நாளைக்கு எட்டு மணி நேர மின்வெட்டுக்கு வழிவகுக்கும் என பொதுப் பயன்பாட்டு ஆணையம் (PUCSL) தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடிக்கு டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி எவ்வளவு அதிகரித்தாலும் ரூபாவின் பெறுமதியைச் சுதந்திரமாகப் பெற அனுமதிப்பதே தீர்வாகும் என பொதுப் பயன்பாட்டு ஆணையம் தலைவர் ஜனக ரத்நாயக்க கூறியுள்ளார்.
எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதால் சுமார் 700 மெகாவோட் மின் உற்பத்தி நிலையங்கள் செயற்படாமையே மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாகவும், அரசாங்கத்திடம் மின்சாரத்தைத் துண்டிக்க வேண்டாம் எனக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஏற்படுத்தப்படும் இவ்வாறான மின்வெட்டு நாட்டின் பொருளாதாரத்துக்குப் பாதகமாக அமையும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் இன்றைய தினமும் சுழற்சிமுறையில் 7 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri
