மின் துண்டிப்பு தொடர்பில் வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு!
எதிர்வரும் 31ம் திகதி வரை மின்சாரம் துண்டிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார சபையின் பொது முகாமையாளர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த பல வாரங்களாக டொலர் பற்றாக் குறையால் மின்சார உற்பத்தி நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாள் தோறும் மின்சார தடை ஏற்பட்டது. எனினும், கடந்த மூன்று நாட்களாக எரிபொருள் விநியோகம் சீர் செய்யப்பட்டமையால் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், எதிர்வரும் 31ம் திகதி வரையிலும் மின்சாரம் துண்டிகப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் பற்றாக் குறையை நிவர்த்திகும் முகமாக இந்தியா, இலங்கைக்கு 500 மில்லியன் டொலர்களை நிதியாக வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
எரிபொருட்கள் கொள்வனவு செய்வதற்காக இந்த நிதி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை: கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி News Lankasri
