அடுத்த சில நாட்களில் காத்திருக்கும் பெரும் நெருக்கடி! - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தற்போதைய நிலையில், நாளொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு மணிநேரம் மின்வெட்டு அவசியமானது என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இல்லையெனில், நாள் ஒன்றுக்கு நான்கு முதல் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டை தவிர்க்க முடியாமல் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கின்றனர்.
நீர் மின் உற்பத்தி 25 வீதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், மின் உற்பத்திக்கு நீரை பயன்படுத்தினால், மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களில் நீர் நெருக்கடி மேலும் அதிகரிக்கும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 60 வீதமாக குறைந்துள்ளதாகவும், அது 40 வீதத்திற்கு கீழ் குறைந்தவுடன் மின் உற்பத்தியை நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
எரிபொருளை வாங்குவதற்கு டொலர் கிடைக்காததாலும், தனியார் டீசல் மின் உற்பத்தி நிலையங்களில் அவசர கொள்முதலின் கீழ் அதிக விலைக்கு மின்சாரம் பெற முடியாததாலும் தினமும் இரண்டு மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படுவதே சிறந்த தீர்வாக அமையும் எனவும் தெரிவிக்கின்றனர்.
இப்படியே தொடர்ந்தால் அடுத்த மூன்று நான்கு வாரங்களுக்கு தினமும் ஏழு முதல் எட்டு மணி நேரம் மின்சாரம் துண்டிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் எச்சரிக்கின்றனர்.
இதேவேளை, மின்வெட்டை அனுமதிப்பதா இல்லையா என்பதை இன்று தீர்மானிக்கவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் மின் நெருக்கடி குறித்து ஆய்வு செய்து இன்று பிற்பகல் முடிவு எடுக்கப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan
