முன்னர் எடுக்கப்பட்ட முடிவை சிறிது நேரத்திலேயே மாற்றியமைத்த கோட்டாபய!
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து மின் துண்டிப்பு மேற்கொள்ளாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின் சக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை அடுத்து இன்று முதல் மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்திருந்து.
இதன்படி, அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த இலங்கை மின்சார சபை, A பிரிவு : 17:30 முதல் 18:30 வரை, B பிரிவு: 18:30 முதல் 19:30 வரை, C பிரிவு : 19:30 முதல் 20:30 வரை, D பிரிவு: 20:30 முதல் 21:30 வரை என்ற அடிப்படையில் மின் துண்டிப்பு செய்யப்படும் என அறிவித்திருந்தது.
இந்நிலையிலேயே, ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து மின் துண்டிப்பு மேற்கொள்ளாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின் சக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள இரண்டு எண்ணெய் தாங்கிகளுக்கு அமெரிக்க டொலர் கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இலங்கையின் மின்சக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
எனவே மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என அமைச்சர் கம்மன்பில இன்று அறிவித்துள்ளார்.
