நாடு முழுவதும் மின் தடை! விசேட அறிவிப்பு வெளியானது
நாடு முழுவதும் இன்றும் நாளையும் மின் தடை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மாலை 6 மணியிலிருந்து இரவு 9.30 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணி நேர மின் தடை அமுலில் இருக்கும் என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு தற்போது சரி செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் அவர் இதனை கூறியுள்ளார். இருப்பினும், 2வது மின்பிறப்பாக்கி இன்னும் முழுமையாக சரி செய்யப்படவில்லை என்றும், முழுமையாக செயல்பட இன்னும் 2 நாட்கள் ஆகும் என்றும் அவர் கூறினார்.
இதனால் இன்றும் நாளையும் மின் தடை அமுல்படுத்தப்படும் என சுலக்ஷனா ஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் மின்தடை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் மின் வழித்தடங்களில் ஏற்பட்ட கோளாறினால் இத்தடை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நாள் தோறும் ஒரு மணிநேரம் மின்தடை ஏற்பட்டிருந்தது. எனினும், இன்று நிலைமை சீராகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளையும் மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
