இலங்கையில் அதிகரித்துள்ள இராணுவ பலம்: வெளியாகியுள்ள முக்கிய தகவல்-செய்திகளின் தொகுப்பு
உலகின் பலம்பொருந்திய நாடுகளை விடவும் இலங்கையின் இராணுவ பலம் அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் சுமார் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் இராணுவப் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த எண்ணிக்கையை உடன் குறைக்குமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.பாரியளவில் இராணுவப் படையினரை பராமரிப்பதற்கு பெரும் பொருட்செலவு ஏற்படும் என சுட்டிக்காட்டியுள்ளது.
மக்களுக்கு உணவு பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் இராணுவத்தின் உணவுச் செலவு பத்து கோடி ரூபா என தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 51ம் அமர்வுகளுக்கு வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் அடுத்த ஆண்டுக்கான இராணுவ செலவு 373 பில்லியன் ரூபா எனத் தெரிவிக்கப்படுகின்றது. இது கடந்த ஆண்டை விடவும் 14 வீத அதிகரிப்பாகும்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய செய்திகளின் தொகுப்பு,

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
