மின்சக்தி அமைச்சர் பதவி விலக வேண்டும்: சோபித்த தேரர் கோரிக்கை- செய்திகளின் தொகுப்பு
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரான காஞ்சன விஜேசேகரவும், அமைச்சின் செயலாளரும் உடன் பதவி விலக வேண்டும் என்று கலாநிதி ஓமல்பே சோபித்த தேரர் வலியுறுத்தியுள்ளார் .
நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடைக்கு பொறுப்பை ஏற்றே இவர்கள் பதவி விலக வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இப்படியான மின் துண்டிப்புகள் இடம்பெறக்கூடும். எனவே, உரிய ஏற்பாடுகள் அவசியம் என பொது பயன்பாட்டு ஆணைக்குழு பரிந்துரை முன்வைத்திருந்தது. எனினும், அந்த பரிந்துரை குறித்து கவனம் எடுக்கப்படவில்லை.
தன்னிச்சையாக செயற்படும் அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் அசமந்தபோக்கு காரணமாகவே மின் தடை ஏற்பட்டுள்ளது. இது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற பெரும் அநியாயமாகும்.
அமைச்சரும், அமைச்சின் செயலாளரும் பதவி விலக வேண்டும் என்றார். அதேவேளை, மேலும் சில சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளனர்.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam