மின்வெட்டு காலப்பகுதி குறித்து வெளியாகியுள்ள மகிழ்ச்சியான செய்தி
கடந்த சில நாட்களாக நுரைச்சோலை அனல்மின் நிலைய மூன்றாவது மின்பிறப்பாக்கி இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருந்தது.
தற்போது இந்த கோளாறு சீர் செய்யப்பட்டு மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவு
Breakdown in the Norochcholai Power Plant Unit 3 has been fixed & connected back to the National grid. Both Units 1 & 3 are operating at full capacity.
— Kanchana Wijesekera (@kanchana_wij) October 1, 2022
The ongoing 3 month long routine overhaul maintenance work on Unit 2 is expected to be completed in mid October.
தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை மேற்கொண்டு இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவில், நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் முதலாவது மற்றும் மூன்றாவது மின்பிறப்பாக்கி இயந்திரங்கள் முழு திறனில் இயங்குவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பராமரிப்பு பணிகள்
இரண்டாம் மின்பிறப்பாக்கி இயந்திரத்தில் நடந்துவரும் 3 மாத வழக்கமான பராமரிப்பு பணிகள் ஒக்டோபர் நடுப்பகுதியில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் மூன்றாவது அலகில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, மின்வெட்டு நேரத்தை ஒரு மணித்தியாலத்தினால் அதிகரிக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியிருந்தது.
இந்நிலையில், நுரைச்சோலை மின்நிலையத்தின் செயலிழப்பால் தேசிய மின்கட்டமைப்புக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய தனியாரிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், மேலதிக மின்வெட்டு தவிர்க்கப்பட்டுள்ளது.