நாளாந்த மின்வெட்டு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
புதிய இணைப்பு
இன்றும் நாளையும் ஒன்றரை மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
தற்போதையை நிலைமையை கருத்திற் கொண்டு மின் தடையை நடைமுறைப்படுத்த வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில், இவ்வாறு ஒன்றரை மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையம் மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படும் வரை இந்த மின்வெட்டு தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
முதலாவது இணைப்பு
நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தை மீண்டும் தேசிய மின் அமைப்புடன் இணைக்கும் வரை மின்சாரத்தை தடையை நடைமுறைப்படுத்த வேண்டுமா, இல்லையா என்பது தொடர்பில் இன்று(10) தீர்மானிக்கப்படும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.
இன்றைய கலந்துரையாடலில் மின்வெட்டு இல்லாமல் மின்சார விநியோகத்தை நிர்வகிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கவனம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கொழும்பின் சில பகுதிகளில் இன்றும் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு 13 உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருந்தது.
இதேவேளை, நேற்றையதினம் காலை 11.15 மணி முதல் மாலை வரை நாடளாவிய ரீதியில் திடீர் மின் ஏற்பட்டதுடன், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், எதிர்வரும் நாட்களிலும் கூட இவ்வாறு மின் தடை ஏற்படக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் கொழும்பின் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)