சுவிட்சர்லாந்தில் இருந்து தலைமறைவான அசாத் மௌலானா
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்ட தரப்பினர் அனைவரும், அரசாங்கத்தின் அரிச்சுவடியை பின்பற்றியும், அரசியல்வாதிகளின் ஆதரவுடனும் இன்றுவரை குற்றச்சாட்டுக்களை மறுத்து வருகின்றனர்.
இந்த தாக்குதல் விவகாரமானது ராஜபக்கர்களின் திட்டமிட்ட செயல் எனவும், முன்னால் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரக்காந்தனின் வழிகாட்டுதல் எனவும் முன்வைக்கப்பட்ட பல விமர்சனங்கள் கடந்த கால செய்திகளின் தலையங்கம் ஆகியிருந்தன.
இந்நிலையில் கடந்த ஆட்சிகாலத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சராக இருந்த சிவநேசத்துரை சந்திரக்காந்தனின் (பிள்ளையான்) நெருங்கிய சகபாடியான ஹன்சிர் அசாத் மௌலானா உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து திடுக்கிடும் தகவல்களை சனல் 4 ஊடாக 2023 ஆம் ஆண்டளவில் வெளியிட்டிருந்தார்.
இதன்படி தற்போது ஆட்சி அமைத்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அசாத் மௌலானாவின் தகவல்கள் குறித்து உடனடி விசாரணைகள் நடைபெற வேண்டும் எனவும், அதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் கூறிவருகிறது.
முன்னைய அரசாங்கங்களில் முறையான தீர்வு கிடைக்கமல் தொடர்ந்த இந்த வழக்கு விவகாரம் மற்றும் குற்றச்சாட்டுக்கள் தூசு தட்டப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பில் ஆராயப்பட்டது.
இது குறித்து பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி ஆருஸ் சுவிட்சர்லாந்தில் இருந்து அசாத் மௌலானா தலைமறைவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அசாத் மௌலானாவின் தற்போதைய நிலை தொடர்பிலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நகர்வு தொடர்பில் விரிவாக ஆராய்கிறது இன்றைய ஊடறுப்பு...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Serial update: அத்துமீறிய அறிவுக்கரசி.. கழுத்தை நெறித்தப்படி எச்சரித்த அதிகாரி- தர்ஷன் மாட்டுவாரா? Manithan

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: அடுத்த 48 நாட்கள் என்ன நடக்கும்? டால்பின்களின் வரவேற்பு வீடியோ News Lankasri

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை... தொலைபேசியில் நீண்ட ஒரு மணி நேரம் காத்திருக்க வைத்த புடின் News Lankasri
