வவுனியா - உக்குளாங்குளத்தில் தொடர் மின்தடையால் கடும் சிரமத்தில் மக்கள்
வவுனியா - உக்குளாங்குளம் பகுதியில் கடந்த 24 மணிநேரத்திற்கு மேலாக மின்சாரம் கூடிக் குறைந்து சீரற்ற வகையில் செல்வதால் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டு மின்சாரப் பொருட்கள் செயலிழந்து நாசமாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பில் நேற்றில் இருந்து (17.07.2025) மின்சார சபைக்கு பலமுறை தெரியப்படுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று (17) பிறபகல் 2 மணியளில் வவுனியா, உக்குளாங்குளம் பகுதிக்கான மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது. அதன் பின் மின் குறைந்து, கூடி சீரற்ற நிலையில் கிடைத்துள்ளது.
பல தடவை முறைப்பாடு
சீரற்ற மின் விநியோகம் காரணமாக வீட்டு பாவனையில் இருந்து குளிரூட்டிகள், மின்விசிறிகள், மின் குமிழ்கள், மோட்டர்கள், மின்னேற்றி என பல மின் உபரணங்கள் செயலிழந்துள்ளன.
அத்துடன், இது தொர்பில் பலரும் மின்சார சபைக்கு தெரியப்படுத்திய போதும் திருத்த வேலைக்கு வருவதாக கூறியுள்ளார்களே தவிர, 24 மணித்தியாலம் கடந்தும் திருத்தம் செய்யப்படவில்லை.
இதனால் அப்பகுதி மக்களின் பல இலட்சம் பெறுமதியான மின் உபகரணப் பொருட்கள் செயலிழந்து, நட்டம் ஏற்பட்டுள்ளதுடன் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri
