நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் துண்டிப்பு! இன்று பகிரங்க விசாரணை
நாடு முழுவதும் கடந்த பெப்ரவரி 9ஆம் திகதி ஏற்பட்ட திடீர் மின் துண்டிப்பு தொடர்பாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று(5) பகிரங்க விசாரணை ஒன்றை நடத்தவுள்ளது.
2002ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு 18ன் கீழ் நடைபெறும் இந்த விசாரணை, கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் காலை 8.30 முதல் மாலை 6.00 மணிவரை நடைபெறும்.
அனைவருக்கும் அழைப்பு
மின்துறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதுடன், நாடு முழுவதும் ஏற்பட்ட மின்வெட்டின் உண்மையான காரணங்களை கண்டறிவதே இந்த விசாரணையின் முக்கிய நோக்கமாகும் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த விசாரணையில் கலந்து கொள்ளும் வகையில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்புகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் சிங்கம் சக மகர உற்சவம்





கொற்றவைக்கு பதிலாக ஆஜரான போலீஸ், பதற்றத்தில் குணசேகரன், ஜனனி கண்டுபிடித்த உண்மை... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
