மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவி்ப்பு
புதிய இணைப்பு
இன்று (22) முதல் மின் துண்டிப்பை நடைமுறைபடுத்துவதற்கான தேவைப்பாடுகள் இல்லை என தேசிய மின் கட்டமைப்பு செயல்பாட்டு நிறுவனம் (NSO) அறிவித்துள்ளது.
லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின் உற்பத்தி அலகு, 270 மெகாவாட் முழுமையான உற்பத்தித் திறனுடன் மீண்டும் செயற்படத் தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக, இன்று (22) முதல் மின் தேவை முகாமைத்துவ நடவடிக்கைகள் அவசியமில்லை என தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டாளர் அறிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்திப் பணிகள் இன்று முதல் (22) மீண்டும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை, பிரதான மின் அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
அதன் தாக்கத்தால் நுரைச்சோலையில் உள்ள ஒரு மின்னாக்கியும் செயலிழந்தது.
மின்வெட்டு
இருப்பினும், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் இன்று முதல் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட உள்ளதால், மேலும் மின்வெட்டு தேவைப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது மின்னாக்கியில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு மற்றும் திட்டமிடப்பட்ட பராமரிப்புப் பணிகள் காரணமாக, இலங்கையின் தேசிய மின் கட்டமைப்புக்கு வழங்கும் மின்சாரத்தில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால், தேசிய மின் அமைப்பு 250 மெகாவாட் மின் உற்பத்தித்திறனை இழந்துள்ளது.
இந்த 3 மின்னாக்கிகளில் 2, பராமரிப்புப் பணிகள் காரணமாக செயலிழக்க செய்யப்பட்டிருந்த நிலையில், நாடு முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டது.
இந்நிலையில், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் இன்று முதல் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட உள்ளதால், மேலும் மின்வெட்டு தேவைப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
YOU MAY LIKE THIS
பிரான்சில் வெடித்துள்ளப் போராட்டங்களின் உண்மையானப் பின்னணி: ட்ரம்ப் வைக்கும் குற்றச்சாட்டு News Lankasri