இன்று நள்ளிரவு வரை இருளில் மூழ்கப்போகும் இலங்கையின் பல பகுதிகள்: புதிய வலயங்களும் இணைப்பு (செய்திப்பார்வை)
இலங்கையில் 10 மணிநேர மின்வெட்டு தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று நள்ளிரவு வரையான இரவு நேர காலப்பகுதியில் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கும் சாத்தியம் காணப்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய தினம் நாட்டில் 10 மணிநேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, இன்று காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 10 மணித்தியாலங்களுக்கு நாடளாவிய ரீதியில் பல்வேறு நேரங்களில் மின்வெட்டு ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
A முதல் L வரையிலான வலயங்களில் காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 10 மணி நேரமும், B முதல் W வரையான வலயங்களுக்கு 10 மணி நேரமும் மின்தடை ஏற்படும்.
மேலதிகமாக, M, N, O, X, Y, Z என பல புதிய வலயங்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
இச்செய்தி உள்ளிட்ட கொழும்பு தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் நேற்றைய தினம் இடம்பிடித்த முக்கிய செய்திகளின் தொகுப்பை இந்த பதிவில் காணலாம்,



