மின்தடை குறித்து சிறப்பு அறிக்கை வெளியீடு
கடந்த 9ஆம் திகதி, நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடையைத் தொடர்ந்து, மின் கட்டணத்தின் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்த உடனடி மற்றும் நீண்டகால நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை மின்சார சபை சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பொதுமக்களுக்கு உறுதியளிப்பு
குறித்த அறிக்கையில், மின் தடைக்கான காரணத்தையும், மின் கட்ட நிலைத்தன்மைக்கு எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் இலங்கை மின்சார சபை தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், கடந்த 9ஆம் திகதி அன்று காலை 11.13 மணிக்கு ஏற்பட்ட நாடு தழுவிய மின் தடையின் போது பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கும் வருத்தம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க உடனடி மற்றும் நீண்டகால திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இலங்கை மின்சார சபை பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனாக நடிக்கும் ஸ்டாலின் முத்துவின் குடும்ப புகைப்படங்கள் Cineulagam
திறப்பு விழா நாளில் ஜனனிக்கு ஏற்பட்ட நெருக்கடி, எப்படி சமாளிக்க போகிறார்.... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பிரித்தானிய ஏவுகணையை பயன்படுத்திய உக்ரைன்: ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல் News Lankasri
இந்தியாவிலேயே அதிகபட்ச விலை.. துரந்தர் ஓடிடி உரிமை வாங்கிய நெட்பிலிக்ஸ்! புஷ்பா 2 சாதனையை தகர்த்தது Cineulagam