நாட்டின் பல பகுதிகளுக்கு மின் தடை
நாட்டின் பல பகுதிகளுக்கு மின்சாரம் தற்போது முழுமையாக வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நவலக்ஷபான மற்றும் பொல்பிட்டிய மின் விநியோக கட்டமையில் ஏற்பட்ட திடீர் தடை காரணமாக பல பகுதிகளில் மின் விநியோகம் தடைப்பட்டது.
அதற்கமைய நுவரெலியா, மொனராகலை, பதுளை மற்றும் பழைய லக்ஷபான துணை மின் நிலையங்களில் இன்று மதியம் மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.
திடீர் மின் தடை
இதன் காரணமாக, துணை மின் நிலையங்களால் மின்சாரம் வழங்கப்படும் பகுதிகளில் திடீர் மின் தடை ஏற்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதேபோல், இன்று மதியம் ஹம்பாந்தோட்டை மற்றும் எம்பிலிப்பிட்டியவிற்கு மின்சாரம் வழங்கும் பிரதான மின் கட்டமைப்பிலும் திடீர் கோளாறு ஏற்பட்டது.
இதன் காரணமாக, எம்பிலிப்பிட்டிய, பெலியத்த, பலாங்கொடை, தெனியாய, காலி, மாத்தறை மற்றும் அம்பலாங்கொட துணை மின் நிலையங்களுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், இந்த துணை மின் நிலையத்தால் வழங்கப்படும் பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும், மின்சாரம் துண்டிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் தற்போது மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.