ஸ்பெய்ன், போர்த்துக்கலில் பாரிய மின் தடை
ஸ்பெய்ன் மற்றும் போர்த்துக்களில் பாரிய மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது.
மின்சாரத் தடை காரணமாக விமானப் போக்குவரத்து, பெருந்தெருக்களின் போக்குவரத்து உள்ளிட்ட மக்களின் அன்றாட வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடைகளில் கொடுக்கல் வாங்கல்கள் செய்வதிலும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரத் தடை காரணமாக வீதிப் போக்குவரத்து சமிக்ஞைகள் ஸ்தம்பித்துள்ளதாகவும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனம் செலுத்த வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.
தேவையின்றி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
என்ன காரணத்தினால் இந்த மின்சாரத் தடை ஏற்பட்டது என்பது பற்றிய துல்லியமான விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
எனினும் போர்த்துகல், ஸ்பெய்ன் மற்றும் பிரான்ஸின் சில பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
மின்சாரத்தை மீள வழங்குவதற்கு குறிப்பிடத்தக்க காலம் தேவைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரத் தடை காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ரயில் போக்குவரத்தும் ஸ்தம்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
வெப்பநிலை மாற்றங்களினால் இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டிருக்கலாம் என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது.