பெப்ரவரி மற்றும் ஏப்ரலில் மின் துண்டிப்பு கட்டாயம்
எதிர்வரும் பெப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் கட்டாயம் மின்சார துண்டிப்பை ஏற்படுத்த நேரிடும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் WION News ஊடகத்திடம் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
நாட்டின் மின்சார தேவையானது வருடந்தோறும் 8 வீதமாக அதிகரித்து வருகிறது. மின்சார தேவைக்கு ஏற்ப மின்சாரத்தை விநியோகிப்பதற்காக நீர் மின் நிலையங்களோ, அனல் மின் நிலையங்களோ கடந்த 2014 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்படவில்லை.
இந்த நிலையில் நீர் தேக்கங்களில் நீர் மட்டம் குறைந்துள்ளதன் காரணமாக நீர் மின் உற்பத்தி நிலையங்களில் போதுமான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது போகும்.
இதனால், ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையான வறண்ட காலநிலை நிலவும் காலத்தில் மின்சார தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலைமை ஏற்படும் எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.





மறைந்த ரோபோ ஷங்கர் குடும்பம் பட்ட கஷ்டம்.. மாதம் இவ்வளவு லட்சம் EMI கட்டவேண்டுமா? வெளிவந்த உண்மை Cineulagam

கரூரில் 41 பேர் மரணம்.. 34 மணி நேரத்துக்கு பின் வீட்டை விட்டு வெளியே வந்த விஜய்..எங்கு செல்கிறார்? Cineulagam
