மின்சாரக் கட்டணத்தை 14 வீதத்தால் குறைக்க இலங்கை மின்சார சபை தீர்மானம்
மின்சாரக் கட்டணத்தை சராசரியாக 14 வீதத்தால் குறைக்க முடியும் என இலங்கை மின்சார சபை, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம்
தெரிவித்துள்ளது.
குறித்த தீர்மானமானது, மின்சாரக் கட்டணத்தை 18 வீதத்தால் குறைக்க முடியும் என்ற எரிசக்தி அமைச்சரின் கூற்றுக்கு முரணாக எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாடிக்கையாளர் பிரிவினருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் திருத்தப்பட்ட கட்டண முன்மொழிவு தயாரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின் கட்டணக்குறைப்பு
மேலும், கணிசமான நிதிப் பலன்களை அளிக்கும் வகையில், மூலோபாய ரீதியாக கட்டணங்கள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன.

அதேநேரம், திட்டக் கடன்களை மிகவும் மலிவு விலையில் வழங்குவதன் மூலம், நிதிச் சுமையை குறைக்க முடியும் எனவும் மின்சாரசபை தெரிவித்துள்ளது.
பணியாளர் செலவுகள், பொருள் செலவுகள், சிவில் கட்டமைப்புகளை பராமரிப்பதற்கான செலவுகள் மற்றும் பயன்பாட்டு வாகனங்களின் எரிபொருள்,வாகன பராமரிப்பு போன்றவற்றில் செலவுக்குறைப்பு செய்வதன் மூலம் கட்டணக்குறைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இருப்பினும், இன்னும் கட்டணக்குறைப்பு தொடர்பில் விவாதங்கள் இடம்பெற்று வருமின்றன என மின்சாரசபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam