நாட்டில் வறுமை ஒழியவில்லை! பிரஜாசக்தி உறுப்பினர்களுடன் விசேட கலந்துரையாடல்
கடந்த காலங்களில் ஆட்சி செய்த அரசாங்கங்களால் வறுமை ஒழிப்பதற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருந்தாலும் நாட்டில் வறுமை ஒழியவில்லை என கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி இரணைமடுவில் அமைந்துள்ள (நெழும்பியச) தாமரை தடாக மண்டபத்தில் இன்று(11-03-12026) பிரஜாசக்தி உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதில், கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
வறுமை ஒழிப்பு வேலைத்திட்டம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அதாவது வறுமை ஒழிப்பு வேலைத்திட்டத்தை இந்த அரசாங்கத்தினால் கடந்த வருடத்தின் ஜூலை மாதத்தில் தான் ஆரம்பித்திருந்தோம். இதற்கு முன்னர் இந்த நாடு சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து வறுமையை ஒழித்து கட்டுவதற்கு பல்வேறு திட்டங்கள் அரசாங்கங்களினால் அறிமுகப்படுத்தப்பட்டன.

குறிப்பாக ஜனசக்தி சமுர்த்தி அஸ்வெசும போன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் 24 விதமான மக்கள் வறுமையில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையிலே சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.
குறிப்பாக 90 விதமான மக்கள் பல்வகை வறுமையின் கீழ் வாழ்கின்றார்கள். அதாவது மலையகம் மற்றும் கிராமப்புறங்களில் வாழ்கின்ற மக்கள் தொடர்ந்தும் வறுமையிலே வாழ்கின்றனர் என்றார்.
இன்று காலை 9:30 மணிக்கு கிளிநொச்சி இரணை மடுவில் அமைந்துள்ள நெலும்பியச (தாமரைத் தடாகம் ) மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே, நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன், கிளிநொச்சி, முல்லைதீவு, வவுனியா, மன்னர் ஆகிய மாவட்டங்களில் அரச அதிபர்கள் பிரதேச செயலாளர்கள், பிரஜாசக்தி உறுப்பினர்கள் மற்றும் மாவட்டச் செயலக பிரதேச பதவி நிலை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.


ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam