கொட்டித் தீர்க்கும் மழை! மலேசியாவில் 14 பேர் உயிரிழப்பு: செய்திகளின் தொகுப்பு(Video)
மலேசியாவில் மழை, வெள்ள பாதிப்பு காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தற்காலிக தங்குமிடங்களில் குவிந்துள்ளதுடன், 14 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. இடைவிடாது கொட்டும் பேய் மழையால் 8 மாகாணங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாகத் தலைநகர் கோலாலம்பூர் அமைந்துள்ள மற்றும் மக்கள் அடர்த்தி அதிகமுள்ள சிலாங்கூர் மாகாணம் மிகவும் மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. அங்கு காணும் இடமெல்லாம் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது.
சாலைகளில் மார்பளவுக்கு மழைநீர் தேங்கி நிற்கிறது. 8 மாகாணங்களிலும் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,