பொத்துவில் - பொலிகண்டி வரையான பேரணி நிறைவிடம் நோக்கி நகர்கிறது
தமிழ் பேசும் மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டம் பல்லாயிரக் கணக்கானோரின் ஆதரவுடன் பொலிகண்டி மண்ணை சென்றடைந்துள்ளது.
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி பேரணியை யாழ்ப்பாணம் மாநகருக்குள் செம்மணி நல்லூர் அலங்கார வளைவில் வைத்து மக்கள் அணிதிரண்டு வரவேற்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து யாழ்.நெல்லியடியில் முதல் கரும்புலி மில்லரிற்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு பொலிகண்டி நோக்கி பேரணி நகர்ந்துள்ளது. மக்கள் புரட்சியாக நீதி கோரிய பேரணி விண்ணை அதிரவைக்கும் கோசங்களோடு தமிழர்களுக்கான நீதியை பெற்று தருவதில் காலம் தாழ்த்த வேண்டாம் என இந்த அறவழிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு கிழக்கு மாகாண, சமயத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து மக்களை அணி திரட்டி இந்த போராட்டத்தை நடத்துகின்றனர்.
தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள் உள்பட இலங்கை முழுவதும் திட்டமிட்டு நடாத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வடகிழக்கு தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள், பல்சமய ஒன்றியங்கள் இணைந்து அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைகளை நடைமுறை படுத்த கோரியும், மலையக தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்தக் கோரியும் முஸ்லிம் மக்களின் மத நம்பிக்கைகளை மதிக்கக் கோரியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் தமிழ் பேசும் மக்களின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த போராட்டமானது இன்றைய தினம் பெரும் எழுச்சியுடன் முடிவிற்கு வரவுள்ளது.












சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
