இலங்கையில் வாகனங்களின் விலை குறைவதற்கான சாத்தியம்
தற்போது உயர்ந்துள்ள வாகனங்களின் விலை அடுத்த வாரத்தின் பின்னரான காலப்பகுதியில் ஓரளவு குறையும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் மெரின்னகே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், வாகனங்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் விரைவில் நீக்கப்படும் என்று தான் நம்புகிறோம்.
வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் மற்றும் மத்திய வங்கி ஆகியன வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்குவதற்கான ஒழுங்குமுறை குறித்து கலந்தாலோசித்து வருகிறது.
ஜனாதிபதி செயலாளரின் தலையீட்டுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த பேச்சுவார்த்தையானது மிகவும் பயனுள்ளதாக அமையும். அடுத்த வாரம் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் சாதகமான தீர்வு எட்டப்படலாம்.
இதனடிப்படையில் தற்போது நியாயமற்ற முறையில் உயர்த்தப்பட்டுள்ள வாகனங்களின் விலை ஓரளவு குறையும் என குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 7
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 5 நாட்கள் முன்
என்னை தேடாதீர்கள் என அம்மாவிடம் கூறிவிட்டு கேரளா சென்ற ஜேசன் சஞ்சய் - 100 மீட்டரில் சிறுத்தை! Manithan
43 வயதில் செம கிளாமர் போட்டோ ஷுட் நடத்தி ரசிகர்களை கவரும் நடிகை விஜயலட்சுமி... வீடியோவுடன் இதோ Cineulagam