வெளிநாடுகளிலிருந்து தபால் திணைக்களத்திற்கு கிடைத்த பொதிகள் மாயம்
கடந்த இரண்டு மாதங்களில் வெளிநாட்டிலிருந்து தபால் திணைக்களத்திற்கு கிடைத்த 60க்கும் மேற்பட்ட பொதிகள் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பார்சல்களை ஸ்கேன் செய்து ஆய்வு செய்ததில் இந்தத் தகவல் வெளியாகி உள்ளது. பார்சல்களை பெற்றுக்கொள்ள வருமாறு அழைப்பு விடுத்தும், உரிமையாளர்கள் வராததால், பார்சல் ஸ்கேன் செய்யப்பட்டதுள்ளது.
இந்த வழியில் பெறப்பட்ட பார்சல்கள் 30 நாட்களுக்கு பிறகு அந்தந்த உரிமையாளர் வரவில்லை என்றால் அதே முகவரிக்கு திருப்பி அனுப்பப்படும்.
மாயமான பொதிகள்
உள்ளடக்கத்தில் உள்ள பொருட்கள் இல்லை என்றால் அதனை திருப்பி அனுப்ப முடியாமல் போகும்.

இந்த பார்சல்களில் உள்ள பொருட்கள் ஊழியர்கள் ஊடாக தபால் திணைக்களத்திலிருந்து இரகசியமாக வெளியேற்றப்படுவதால் அவற்றின் உரிமையாளர்கள் வருவதில்லை என திணைக்களத்திற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்த பார்சல்கள் திணைக்களத்தின் EMS விரைவு சேவை மூலம் விநியோகிப்பதற்காக பெறப்பட்டுள்ளன. கடந்த காலங்களில், இந்த சேவையின் மூலம் வழங்கப்பட்ட சில பார்சல்களில் போதைப்பொருள் கூட இருந்துள்ளது.
திணைக்கள ஊழியர்கள்
குறித்த பார்சல்களில் சட்டவிரோதமான பொருட்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன. விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்தார்.

அவற்றில் உள்ள பொருட்கள் அல்லது உள்ளடக்கங்களை விடுவிப்பதில் திணைக்கள ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாகவும் தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
you may like this
 
    
     
    
     
    
     
    
     
        
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        