இலங்கை கிரிக்கட் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகளுக்கிடையேயான சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாடசாலையிலிருந்து தேசிய மட்டத்திற்கு கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்கான குறுகிய மற்றும் நீண்டகால மூலோபாயம் குறித்து கிரிக்கட் அதிகாரிகள் இன்று ஜனாதிபதியை சந்திப்பார்கள் என்று அமைச்சர் இன்று காலை ட்வீட் செய்திருந்தார்.
இந்த கலந்துரையாடல் விளையாட்டின் வளர்ச்சிக்கான தேவைகளுடன் முன்னோக்கி செல்லும் பாதை தொடர்பிலும் கவனம் செலுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும்,இந்த சந்திப்பு பின்னர் ஒரு திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக நாமல் ராஜபக்ஷ இன்று மாலை ட்வீட் செய்துள்ளார்.
இதற்கான காரணத்தை அவர் அறிவிக்கவில்லை.