ஒத்திவைக்கப்படும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்:முதல் முறையாக தேர்தல் ஒன்றை ஒத்தவைக்கும் ராஜபக்சவினர்!
உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது சம்பந்தமான அமைச்சரவை பத்திரத்தை அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் (Janka Bandara Thennakoon) அமைச்சரவையில் ஏற்கனவே தாக்கல் செய்துள்ளார்.
கடந்த வாரம் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த பத்திரம் தொடர்பில் 13ம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa), நிதியமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) மற்றும் அமைச்சர் தென்னகோன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடிய பின்னர், இது பற்றி அமைச்சரவையில் பேசப்படும் என தெரியவருகிறது.
கடந்த 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் அடுத்தாண்டு பெப்ரவரி மாதம் முடிவடைகின்றது.
கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நாட்டில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் பெரும்பான்மையான சபைகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.
இந்த நிலையில், உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் சட்டத்திற்கு அமைய தேர்தலை ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கும் அதிகாரம் துறைசார்ந்த அமைச்சருக்கு உள்ளது.
இதனடிப்படையிலேயே அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன், உள்ளூராட்சி சபைகளின் பதவி காலத்தை ஓராண்டுக்கு ஒத்திவைக்கும் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே அண்மையில் வைபவம் ஒன்றின் போது கருத்து வெளியிட்டிருந்த ராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க (Roshan Ranasinghe), உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்படும் என கூறியிருந்தார்.





Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri
