யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஒத்திவைப்பு! - வெளியாகியுள்ள அறிவிப்பு
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் 35வது பொது பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தெரிவித்துள்ளார்.
கோவிட் பெருந்தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதனை கூறியுள்ளார்.
இன்று காலை பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாக்குழு ஒன்று கூடியது. இதன் போது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அடுத்த மாதம் 07, 08 மற்றும் 09ம் திகதிகளில் பொது பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் கட்ட நடவடிக்கையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், பட்டமளிப்பு விழாவை நிகழ்நிலைக்கு மாற்றுவது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் 23ம் திகதி அறிவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
முன்னதாக யாழ். பல்கலைக்கழகத்தின் 35வது பொது பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி இம் மாதம் 16, 17 மற்றும் 18ம் திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam