மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளருக்கு எதிராக தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒத்திவைப்பு
மட்டக்களப்பு மாநகரசபை முதல்வரினால் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் மாநகரசபை ஆணையாளருக்கு எதிராக தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.என்.அப்துல்லாவினால் (M.N.Abdullah) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த வழக்கானது 14 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன்(T. Saravanapavan), மாநகர ஆணையாளர் எம்.தயாபரன் (M.Dayaparan) ஆகியோர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.
இந்த வழக்கானது 01-04-2021 அன்று வழங்கிய கட்டளையின் அடிப்படையில் தொடரப்பட்டது.அதுதாவது மாநகரசபையின் 10அதிகாரங்கள் ஆணையாளருக்கு கையளிப்பு செய்யப்பட்டிருந்தது.
எனினும் தொடர்ந்து மாநகரசபையின் செயற்பாடுகளுக்கு குந்தகமளிக்கும் வகையில் ஆணையாளர் செயற்பட்டதன் காரணமாக மாநகர முதல்வரினால் கையளிக்கப்பட்ட அதிகாரங்களை மீளப்பெறுவதற்கான அதிகாரங்களும் காணப்பட்டதன் அடிப்படையில் ஒரு சபை தீர்மானித்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட அதிகாரங்கள் மீளப்பெறப்பட்டன.
இந்த அதிகாரங்களினை ஆணையாளர் தலையிடக்கூடாது என மேல் நீதிமன்றத்தினால் கட்டளை வழங்கப்பட்டிருந்தன.
எனினும் அந்த தீர்மானத்தினை மீறும் வகையில் மாநகரசபையின் ஆணையாளர் செயற்பட்டதன் காரணமாக நீதிமன்ற அவமதிப்பு வழங்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கும்,ஏற்கனவே மாநகர முதல்வரினால் தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை வழக்கும் ஒரே நாளில் விசாரணைக்கு எடுப்பதன் ஊடாக இதற்கான தீர்வினை வழங்கமுடியும் என நீதிமன்றம் கருதியதன் அடிப்படையில் எதிர்வரும் 11-11-2021அன்று இரு வழக்குகளையும் அழைப்பதற்கும் அதற்கு முன்பாக இன்றைய வழக்கு தொடர்பான ஆட்சேபனையினை மனுதாரரும் பிரதிவாதியும் தமது ஆட்சேபனைகளை மன்றுக்கு சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
மனுதாரர் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி கலாநிதி அலி ஸகியுடன் (Ali Saki) சட்டத்தரணி ஆஷாத் (Ashad) ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.








ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 49 நிமிடங்கள் முன்

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
