வவுனியாவில் பரவலாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்
புதிய தாராளவாத முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் மற்றும் இராணுவமயப்படுத்தலுக்கு எதிராக தொழிலாளர், விவசாயிகள், மீனவர்கள் ஒன்றிணைந்து இடதுசாரி கட்டமைப்பை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளுடன் வவுனியாவில் பரவலாக சுவரொட்டிகள் ஒட்பட்டுள்ளன.
நாளைய தினம் தொழிலாளர் தினம் என்பதால் அனைவரும் எவ்வித பாகுபாடும் இன்றி ஒன்றிணைந்து மேதினத்தினை இடதுசாரி கட்டமைப்பை கட்டியெழுப்பும் நோக்கில் இடதுசாரி மே தினமாக பிரகடனப்படுத்தி தொழிலாளர், விவசாயிகள், மீனவர்கள் ஒன்றிணைந்து செயற்படுவோம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த சுவரொட்டிகள் இன்றைய தினம் வவுனியா நகர் உட்பட பல்வேறு பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
சுவரொட்டிகள், இலங்கைக்கான சோசலிச கட்சியினரால் உரிமை கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்த சோகம்: கொடூர தாக்குதலில் 80 வயது மூதாட்டி பலி News Lankasri
கடற்கொள்ளையில் ஈடுபடும் ட்ரம்ப் நிர்வாகம்... எண்ணெய் கப்பல் விவகாரத்தில் ரஷ்யா கடும் தாக்கு News Lankasri