சர்வதேச மீனவ தினத்தை முன்னிட்டு பரவலாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்
மட்டக்களப்பில் நீல நியாயத்துவம் மீனவ மற்றும் விவசாய சமூகத்தின் சமூகப் பாதுகாப்பு சிறு அளவிலான உற்பத்தியாளர்களின் பொருளாதார பாதுகாப்பு மற்றும் இயற்கைச் சூழலின் நல்வாழ்வை உறுதி செய்வோம் எனும் தொனிப்பொருளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் உள்ள சகல மாவட்டங்களிலும் சர்வதேச மாபெரும் மீனவர் தின கொண்டாட்டங்கள் இடம்பெற உள்ளது.
அந்த வகையில் இன்றைய தினம் மீனவர்களின் பாதுகாப்பையும்,வாழ்வாதாரத்தையும் உறுதி செய்வதற்காகக் குறித்த சுவரொட்டிகள் மூலம் மீனவர்களுக்குத் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாளை சர்வதேச மீனவர் தினத்தினை முன்னிட்டு இலங்கை பூராகவும் மீனவர் தின
நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.







