பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடப்போவதாக தபால் ஊழியர்கள் எச்சரிக்கை
பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடப்போவதாக தபால் ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சில கோரிக்கைகளை முன்வைத்து 32 மணித்தியாலங்கள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இன்று மாலை 4.00 மணி முதல் நாளை நள்ளிரவு வரையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தபால் ஊழியர்கள் மற்றும் தபால் திணைக்களம் எதிர்நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தபால் தொழிற்சங்க ஒன்றியத்தின் தலைவர் சின்தக்க பண்டார தெரிவித்துள்ளார்.
தபால் திணைக்களத்தைச் சேர்ந்த சுமார் 25000 பணியாளர்கள் இந்தப் போராட்டத்தில் இணைந்து கொள்வார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, தபால் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இன்று முற்பகல் 10.00 மணிக்கு வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளரை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்த உள்ளனர்.
பேச்சுவார்த்தையின் போது சாதகமான பதில் கிடைக்கப்பெற்றால் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படாது என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

எலோன் மஸ்க்கை தோற்கடித்து உலகின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றை உருவாக்கியவர்... அவரது தொழில் News Lankasri
