நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு (VIDEO)
தபால் ஊழியர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மட்டக்களப்பு
தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் சேவைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பிரதான தபால் நிலையம் உட்பட மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலுமுள்ள தபால் அலுவலகங்கள், உப தபால் அலுவலகங்கள் செயலிழந்து காணப்பட்டுள்ளன.
தபால் விநியோகம் உட்பட அனைத்து நடவடிக்கைககளும் ஸ்தம்பித்திருந்ததாகவும், தபால் சேவைகளைப்பெற தபால் நிலையங்களுக்கு வந்தோர் திரும்பிச் சென்றதை அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
[
தம்பலகாமம்
அஞ்சல் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும், நேற்று (13) திங்கட்கிழமை முதல் 32 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர் .
அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர், சாந்த குமார மீகம இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதனால் தம்பலகாமம் பகுதியில் உள்ள உப தபாலகங்களும் இன்று (14) மூடியிருந்தமையை அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
தம்பலகாமம் உப தபாலகம், கல்மெடியாவ உப தபாலகம் உள்ளிட்ட அனைத்து தபாலகங்களும் மூடப்பட்டு காணப்பட்டதனால் மக்கள் தபாலகத்துக்கு சென்று திரும்பியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலையகம்
தபால் ஊழியர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
16 கோரிக்கைகளை முன்வைத்து தபால் சேவை ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர். நேற்று மாலை 04 மணி முதல் இன்று நள்ளிரவு வரையில் குறித்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தபால் சேவை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
அகில இலங்கை தபால் சேவை மற்றும் தொலைத் தொடர்பு ஊழியர்கள் ஒன்றிணைந்து இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கமைய புதிய சேவை சட்டமூலமொன்றை ஸ்தாபித்தல், சனிக்கிழமை கொடுப்பனவில் 20 வீதத்தை வழங்குதல், வெற்றிடங்களை நிரப்புதல் போன்ற 16 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மலையக தபால் சேவைகளும் பாதிப்புக்குள்ளாகின என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
வவுனியா
வவுனியாவிலும் தபால் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அனைத்து தபால் நிலையங்களும் இன்று ஊழியர்கள் பிரசன்னமாகாமையினால் மூடப்பட்டுள்ளது.
இந் நிலையில் சிறுநீரக கொடுப்பனவு மற்றும் முதியோர் கொடுப்பனவு போன்ற பல்வேறு தேவைகளின் பொருட்டு தபால் நிலையத்திற்கு வருகை தந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றிருந்தமையை அவதானிக்க கூடியதாக இருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கோரிக்கைகளுக்கு உடன் தீர்வு கிடைக்காவிடின் பாரிய தொழில் சங்க நடவடிக்கைக்கு தயாராவோம் என வவுனியா பிரதான தபாலகத்திற்கு முன்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள துண்டு பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வாக்குவாதம்.. பாடகர் மனோவிடம் சசிகுமார் சொன்ன அந்த வார்த்தை Cineulagam
